கனடாவில் முதலுதவி சிகிச்சை பயிற்றுவிப்பாளர் ஒருவர் தன்னிடம் பயிற்சி எடுத்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். 65 வயதான நபர் கடந்த ஜூலை மாதம் இச்செயலில் ஈடுபட்ட நிலையில் இது தொடர்பான புகாரின் பேரில் விசாரணைக்கு பிறகு அண்மையில் கைது செய்யப்பட்டார். முதியவரால் மேலும் சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர், பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.