மாரடைப்பால் 15வயது சிறுவன் பலி

188837பார்த்தது
மாரடைப்பால் 15வயது சிறுவன் பலி
தெலங்கானா மாநிலத்தில் உள்ள நாராயணபேட், தன்வாடா பழங்குடியினர் குருகுலப்பள்ளியில் பயின்று வரும் மாணவர் ஸ்ரீகாந்த் (15). சம்பவத்தன்று ஸ்ரீகாந்த் பள்ளிக்கு சென்ற நிலையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்ட ஆசிரியர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஒப்படைத்தனர். மாரடைப்பால் பள்ளி மாணவன் மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி