திண்டுக்கல் அருகே அண்ணாமலையார் மில்ஸ் காலனியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் ரூபி பெமிலா (12). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். வயிற்றுவலி காரணமாக ரூபி பெமிலா நேற்று பள்ளிக்கு செல்லவில்லை. இந்த நிலையில் வீட்டில் இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சின்னாளப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.