பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 6 பேர் பலி

62பார்த்தது
ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் சனிக்கிழமை இரவு பேருந்தும், காரும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 45 பேர் காயமடைந்துள்ளனர். இதில், பேருந்தும், காரும் நெடுஞ்சாலையில் இருந்து கீழே பாய்ந்தன. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உள்ளூர்வாசிகளின் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு சைபாய் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்தனர். பேருந்தில் பயணித்த மூவரும் காரில் பயணித்த மூவரும் உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்தி