57 விசைப்படகுகளுக்கு அபராதம் விதிப்பு

57பார்த்தது
57 விசைப்படகுகளுக்கு அபராதம் விதிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவி புத்தன்துறை, சின்னத்துறை, தூத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 57 விசைப்படகுகளில், ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். மோசமான காலநிலை மாற்றத்தால், மீனவர்களின் விசைப்படகுகள், எல்லைத் தாண்டி பிரிட்டன் கடற்படை கட்டுப்பாட்டில் உள்ள டியாகோ கார்சியா தீவு பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதனால், பிரிட்டன் கடற்படையால் பிடிக்கப்பட்டு, பின்னர் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால், தமிழ்நாட்டின் மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறை அதிகாரிகள், எல்லைத் தாண்டி சென்றதாக கூறி, மீனவ சகோதரர்களுக்கு தலா ரூ.1 லட்சம் முதல் ரூ.3.50 லட்சம் வரை அபராதம் விதித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி