வயநாடு நிலச்சரிவில் இதுவரை 5,500 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன், "உயிரிழந்தவர்களில் 33 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அரசால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.