உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் லக்சரில் சமீபத்தில் பயங்கர விபத்து நடந்தது. இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் சிறுமி உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ஸ்கூட்டர் தவறான பாதையில் சென்றதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.