கத்தியை காட்டி மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட 5 பேர் கைது

66302பார்த்தது
கத்தியை காட்டி மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட 5 பேர் கைது
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த நபர், திருச்சி இருங்களுரில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு டூவீலரில் வந்த வசந்த் என்பவர், உதவி செய்கிறேன் எனக்கூறி, ஏற்றிக்கொண்டு திருச்சியை நோக்கி சென்ற போது இருங்களுர் குடிசை மாற்று வாரியம் 5ஆம் நம்பர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மது, கஞ்சா போதையில் பயங்கர ஆயுதங்களுடன் இருந்த கவியரசன், யுவராஜ், ரவி, அய்யனார் ஆகியோர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுமாறு அந்த நபரை வற்புறுத்தியுள்ளனர். இதற்கு அவர் மறுத்துள்ளார். தொடர்ந்து ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, அவரை வலுக்கட்டாயமாக ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தியுள்ளனர். மேலும் செல்போன், பணத்தை பறித்துக்கொண்டு அவரை விரட்டினர். சமயபுரம் போலீசில் பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐந்து பேரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி