பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என போலீசாருக்கு உளவு தகவல் கிடைத்தது. இதற்காக பஞ்சாப் மாகாணம் முழுவதும் உள்ள நகரங்களில், இந்த மாதத்தில், 449 உளவு சார்ந்த சோதனைகளை நடத்தி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக பயங்கரவாதிகள் 38 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பலர் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி.) என்ற அமைப்பின் உறுப்பினர்கள், அல்-கொய்தா இயக்க உறுப்பினர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.