கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.3454 கோடி அறிவிப்பு

85பார்த்தது
கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.3454 கோடி அறிவிப்பு
மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.682 கோடியை தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியது. கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.3454 கோடியை ஒதுக்கியுள்ளது. கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட காங்கிரஸ் வறட்சி நிவாரண நிதி வழங்காமல் மத்திய அரசு கர்நாடகாவை வஞ்சிப்பதாகக் குற்றஞ்சாட்டியது. மாநிலத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு நேற்று (ஏப்ரல் 26) முதல்கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில், எஞ்சிய 14 தொகுதிகளுக்கு மே 7 நடக்கிறது.

தொடர்புடைய செய்தி