3 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பம்

50பார்த்தது
3 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பம்
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

தொடர்புடைய செய்தி