டெல்லியில் உள்ள மூன்று பள்ளிகளுக்கு இன்று (டிச., 13) அதிகாலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பட்நகர் சர்வதேச பள்ளி (காலை 4:21), கேம்பிரிட்ஜ் பள்ளி (காலை 6:23) மற்றும் கிழக்கில் உள்ள டிபிஎஸ் பள்ளி ஆகியவற்றிற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன், சோதனை நடத்தி வருகின்றனர். டிச., 9ஆம் தேதி, 44 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.