ஜப்பானில் தொடர்ந்து 30 முறை நிலநடுக்கம் (வீடியோ)

52941பார்த்தது
ஜப்பானில் இன்று பிற்பகல் 12 மணியளவில் 3.5 என்ற அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 3 மணி நேரத்தில் தொடர்ந்து 30 முறை நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இதில் அதிகபட்சமாக 7.1 என்ற அளவில் நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இதையடுத்து அங்கு சுனாமியும் தாக்க தொடங்கியுள்ளது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜப்பானில் பயங்கர நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி தாக்கிய நிலையில் ரஷ்யா, வடகொரியாவுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி