கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 20 பெண்கள்

74பார்த்தது
கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 20 பெண்கள்
ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அங்கன்வாடி வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சிரோஹி முனிசிபல் கவுன்சில் சேர்மன் மகேந்திர மேவாடா மற்றும் முன்னாள் கமிஷனர் மகேந்திர சவுத்ரி ஆகியோர் தங்களைக் கூட்டுப் பலாத்காரம் செய்ததாக 20 பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உணவில் போதைப்பொருள் சேர்த்து பலாத்காரம் செய்ததாக அவர்கள் கூறியுள்ளனர். அந்த கொடூரத்தை வீடியோ எடுத்து மிரட்டுகின்றனர் என கூறியுள்ளனர். தற்போது உயர் நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி