வடகிழக்கு பருவமழை காலத்தில் ஒரு மாதத்தில் 2 புயல்கள் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், "வடகிழக்கு பருவமழை காலத்தில் 2 புயல்கள் உருவாகக்கூடும். இந்த புயல்கள் நவம்பர் 15-ந்தேதி முதல் டிசம்பர் 15-ந்தேதி வரையிலான ஒரு மாத கால இடைவெளிக்குள் ஏற்படும். வட கடலோர மாவட்டங்கள், தெற்கு ஆந்திரா பகுதிகளில் குறுகிய காலத்தில் அதிக மழை இருக்கக் கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.