+2 தேர்வில் கலக்கிய சிறைவாசிகள்!

1888பார்த்தது
+2 தேர்வில் கலக்கிய சிறைவாசிகள்!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் 2023 இன்று, மே 8, காலை 9:30 மணிக்கு வெளியானது. இந்த தேர்வில் கலந்து கொண்ட மாணவர்களில் மொத்தம் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, மாணவர்கள் 3,49,697 (91.45%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மறுபுறம் மாணவியர்கள் 4,05,753 (96.38%) தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், தமிழக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 90 கைதிகளில் 79 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், 4,398 மாற்றுத்திறனாளிகள் தேர்வெழுதினர் அதில், 3,923 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி