மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் வீடுகளுக்கு வெளியேகோலம் போட்டுக்கொண்டிருந்தபோது, 17 வயது சிறுவன் சாரதி என்பவர் ஒட்டி வந்த கார் அவர்கள் மீது மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த பிரியன்ஷி பிரஜாபத் (21), நவ்யா பிரஜாபத் (14) ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.