மகளிர் டி20 ஆசிய கோப்பையில் இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தனர். ஸ்மிருதி மந்தனா 60 ரன்கள் எடுத்தார். ரிச்சா 30, ஜெமிமா 29, ஷபாலி 16, கவுர் 11 ரன்களுடன் சிறப்பாக செயல்பட்டனர். இலங்கை பந்துவீச்சாளர்களில் கவிஷா 2 விக்கெட்டுகளையும், உதேஷிகா, சச்சினி, அதபத்து ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இலங்கையின் இலக்கு 166 ஆக உள்ளது.