பிரபல சின்னத்திரை நடிகை விபத்தில் மரணம்

31896பார்த்தது
பிரபல சின்னத்திரை நடிகை விபத்தில் மரணம்
கர்நாடக மாநிலம், மண்டியாவில் பிறந்த நடிகை பவித்ரா ஜெயராம் (35) சாலை விபத்தில் உயிரிழந்தார். ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே இன்று (மே12) அதிகாலை ஏற்பட்ட பயங்கர விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கன்னடத்தின் 'ரோபோ ஃபேமிலி' தொடர் மூலம் தொலைக்காட்சியில் நுழைந்த பவித்ரா தொடர்ந்து ஜோகாலி, நீலி, ராதாராமன் ஆகிய தொடர்களிலும் நடித்து பிரபலமானார். இவற்றில், தெலுங்கில் வெளியான திரிநயனி சீரியல் மூலம் அவர் புகழ் உச்சிக்குச் சென்றார். இவரின் மறைவிற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி