விருதுநகர் பட்டாசு விபத்தில் 131 பேர் உயிரிழப்பு

81பார்த்தது
விருதுநகர் பட்டாசு விபத்தில் 131 பேர் உயிரிழப்பு
பட்டாசு தயாரிக்கும் தொழில் அதிகம் நடக்கும் விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் 2019 முதல் தற்போது வரை 69 பட்டாசு ஆலை விபத்துகள் நடந்துள்ளன. இந்த பட்டாசு விபத்துகளில் 131 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 146 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் உயர் நீதிமன்ற கிளையில் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பட்டாசு தொழிற்சாலைகளில், உரிய பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்காதது, ரசாயன கலவையை முறையாக பயன்படுத்தாததால் அதிக விபத்து நடக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி