12 கிலோ கஞ்சா பறிமுதல்.. 6 பேர் கைது

594பார்த்தது
12 கிலோ கஞ்சா பறிமுதல்.. 6 பேர் கைது
சென்னை தங்கசாலை வால்டாக்ஸ் சாலை பகுதியில், ஏழுகிணறு ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது‌, சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தபோது, முன்னுக்குப்பின் முரணாக கூறியுள்ளார். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 12 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. காவல் நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணையில், மதுரை சேர்ந்த கிருஷ்ணன் (53) என்பதும் கூட்டாளிகளுடன் சேர்ந்து மதுரை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக 6 பேரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி