10ஆம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் தேதி அறிவிப்பு

68பார்த்தது
10ஆம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் தேதி அறிவிப்பு
தமிழ்நாட்டில் 2023-24 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு தேர்வானது கடந்த மார்ச் 26-ல் தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி நிறைவடைந்தது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த மே 10ஆம் தேதி வெளியானது. பின்னர், தேர்வு முடிவுகள் மீது மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மீது மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முடிவுகள் வரும் 21ஆம் தேதி பிற்பகல் வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி