தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025 - 26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) தாக்கல் செய்து வருகிறார். அவரது பட்ஜெட் உரையில், புதிதாக 10,000 மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் சுய உதவிக்குழுக்களில் இதுவரை இணைந்திடாதவர்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு ரூ. 37 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.