பொங்கலை ஒட்டி வழங்கப்படும் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகிய பொங்கல் தொகுப்புடன் ரூ. 1000-ம் வழங்கப்பட உள்ளது. மேலும் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி வழங்கப்படும் ரூபாய் 1000 உரிமைத் தொகை பொங்கலை ஒட்டி வரும் 10ம் தேதியே வரவு வைக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். 1.15 கோடி மகளிர்க்கு அவர்களது வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்படும்.