வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள போகோ ஹராம் அமைப்பைச் சேர்ந்த 50 இஸ்லாமிய பயங்கரவாதிகள், தர்முவா கவுன்சில் பகுதிக்கு பைக்கில் வந்து கிராமத்தில் உள்ள சந்தை மற்றும் வீடுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். கடந்த செப் 1ஆம் தேதி நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் கிராம மக்கள் இன்று (செப் 3) தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை பாபாங்கிடா பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் .