தஞ்சாவூர்: பாபநாசம் அருகே உள்ள கோபுராஜபுரம், மாலாப்புரம், பெருமாங்குடி நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நடப்பாண்டில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதியில் சமீபத்தில் பெய்த தொடர்ந்து கனமழை காரணமாக 100 ஏக்கருக்கும் மேல் விவசாய நிலங்களில் மழைநீர் சூழ்ந்து நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட நிலங்களை அரசு அதிகாரிகள் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.