கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரலில், பெண்கள், எஸ்சி, எஸ்டி வேலையில்லாத இளைஞர்களை தொழில்முனைவோராகப் பயிற்றுவிப்பதற்கான 'ஸ்டாண்டப்
இந்தியா' திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ரூ.10 லட்சம் முதல் ரூ.1கோடி வரை கடன் பெறலாம். இந்தக் கடனை ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் ஒருவருக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இந்த வங்கிக் கடன் பற்றிய கூடுதல் விவரங்களைப் பெற https://www.standupmitra.in/ என்ற வலைதளப்பக்கத்தை பார்க்கலாம்.