தமிழ் திரைப்பட இயக்குனருக்கு 1 மாதம் சிறை

58பார்த்தது
தமிழ் திரைப்பட இயக்குனருக்கு 1 மாதம் சிறை
நீதிமன்ற உத்தரவை மீறி ‘டி3’ படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்ட பட இயக்குநருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட இயக்குநர் பாலாஜிக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்தார். நடிகர் பிரஜன் நடிப்பில் ‘டி3’ என்ற பெயரில் படம் தயாரிக்க சாமுவேல் காட்சனிடம் தயாரிப்பாளர் மனோஜ் ரூ.4 கோடி பெற்றார். லாபத்தில் 60 சதவீதம் தருவதாக கூறியிருந்த நிலையில், முன்னறிவிப்பு இன்றி படத்தை ஓடிடிட்டியில் வெளியிட்டதாக சாமுவேல் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி