ராஜ்நாத் சிங் கருத்துக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி

84பார்த்தது
ராஜ்நாத் சிங் கருத்துக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி
முதலில் இலங்கை கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்தார்கள்,பின்பு அந்த விவாதம் தங்களுக்கு எதிராக சென்றுவிட்டது என்று தெரிந்தவுடன் இப்போது பாகிஸ்தானை வம்பிழுக்கின்றனர் பாஜகவினர் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், இதுதான் இவர்களின் போலி அரசியல் யுக்தி. உள்நாட்டில் சொல்லிக்கொள்ள எதுவுமில்லாமல், ஒவ்வொரு முறையும் பதவி ஆசைக்காக அண்டை நாடுகளை வம்பிழுத்து பார்ப்பது தான் பாஜகவின் பிரதான நோக்கம். மக்களின் உயிரோ, நீண்டகால வெளியுறவுக் கொள்கை பாதிக்கப்படும் என்றெல்லாம் எந்த கவலையும் இல்லை. கொஞ்சம் கூட பொறுப்புணர்வோ, அரசியல் முதிர்ச்சியோ இல்லாத சிறுபிள்ளைத்தனமான சிந்தனை கொண்டவர்களுடன் இந்திய மக்கள் போராடிக் கொண்டிருக்கிறோம் என பதிவிட்டுள்ளார். பாகிஸ்தான் தீவிரவாதிகள் நாட்டை விட்டு தப்பி சென்றால் அங்கேயே சென்று அவர்களை வீழ்த்துவோம் என ராஜ்நாத்சிங் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி