தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து முதல்முறையாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.
10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திமுக தற்போது பொறுப்பேற்க உள்ளதை அடுத்து மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தின்போதும், திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் பல்வேறு வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் ஸ்டாலினின் முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் எதை எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள லோக்கல் செயலியில் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் தமிழகத்தில் முதல்மைச்சராக பதிவியேற்றவுடன் மு.க.ஸ்டாலின் எதில் முதல் கையெழுத்து போடவேண்டும் என நீங்கள் எதிர்ப்பார்க்கிறீர்கள் என்ற கேள்வியை முன்வைத்திருந்தோம்.
அதன்படி, 'பெட்ரோல் விலை குறைப்பு' என்று 24.25 சதவிகிதம்பேரும் வங்கி விவசாய கடன் தள்ளுபடி என 21.97 சதவிகிதம்பேரும் நீட் தேர்வு ரத்து என 13.12 சதவிகிதம்பேரும் கல்விக்கடன் தள்ளுபடி என 7.51சதவிகிதம் பேரும் கொரோனா உயிரிழப்புக்கு தலா 1 கோடி என 33.29 சதவிகிதம்பேரும் தெரிவித்துள்ளனர். எனவே, கொரோனா உயிரிழப்புக்கு தலா 1 கோடி என்பதே பலரும் தங்களின் விரும்பமாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் தமிழக அரசு எதிர்கொள்ளப்போகும் நிதிநிலையில், அது சாத்தியாமா என்பது பெரும் விவாத்திற்குட்படுத்தவேண்டிய வாக்குறுதிதான், இருப்பினும் இந்த வாக்குறுதிகளில் எதை முதலில் நிறைவேற்ற தமிழக முதல்வராக மு.க .ஸ்டாலின் முதல் கையெழுத்தை போடுவார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இது தவிர உங்கள் எதிர்ப்பார்ப்பு என்ன என்பதையும் கமெண்டில் தெரிவிக்கலாம்.