மணப்பெண்ணை தேடி தராத மேட்ரிமோனி நிறுவனத்திற்கு அபராதம்
கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் செயல்படும் ஒரு மேட்ரிமோனி நிறுவனம் நபர் ஒருவரிடம் 45 நாட்களுக்குள் மணப்பெண்ணை தேடி தருவதாக கூறி ரூ. 30,000 பணம் பெற்ற நிலையில் சொன்னதை செய்யவில்லை. இது குறித்து பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் பணம் கட்டி ஏமாந்த நபருக்கு ரூ. 60,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.