போளூர் 2-ஆவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

வேலூர்-திருவண்ணாமலை சாலையில் பேருந்து நிலையம் எதிரே 2-ஆவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நெடுஞ்சாலைத்துறை உள்கோட்டத்தில் உள்ள மாநில சாலையான கடலூர்-சித்தூர் சாலை மற்றும் போளூர்-ஜமுனாமரத்தூர் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகள் இருந்தன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் ஆர். கிருஷ்ணசாமி ஆலோசனையின்பேரில், கோட்ட பொறியாளர் பி. ஞானவேல் வழிகாட்டுதலின்படி, போளூர் உதவிகோட்ட பொறியாளர் திருநாவுக்கரசு தலைமையில் வேலூர்-திருவண்ணாமலை சாலையில் பேருந்து நிலையம் எதிரே 2-ஆவது நாளாக 2 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், உதவி பொறியாளர் வேதவள்ளி, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி