பாதாமை அதிகமாக உட்கொள்வது தீங்கு விளைவிக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். பாதாமில் அதிக அளவு ஆக்சலேட் இருப்பதால் சிறுநீரக கற்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பாதாம் பருப்பை அதிகமாக சாப்பிடுவதால், அதிக ரத்தப்போக்கு பிரச்சினைக்கு வழிவகுக்கும். எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சில சமயங்களில் மலச்சிக்கலை உண்டாக்கும். வாந்தி போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். அதிகப்படியான பாதாம் சாப்பிடுவதால் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.