ராஷ்மிகா மந்தனா-Rashmika Mandanna

வன அதிகாரியை கொடூரமாக தாக்கிய சிறுத்தை

மத்திய காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் சிறுத்தையை பிடிக்க முயன்ற வன அதிகாரியை சிறுத்தை கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. கந்தர்பால் மாவட்டத்தில் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்கும் பணியில் வன அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிகாரி ஒருவர் சிறுத்தையை தடி கொண்டு தாக்கவே, கோபம் அடைந்த சிறுத்தை அவர் மீது பாய்ந்து கடுமையாக தாக்கியது. அதிகாரிகளின் நீண்ட முயற்சிக்குப் பின்னர் சிறுத்தை பிடிபட்டது. சிறுத்தை தாக்கியதில் பெண் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.