வெள்ளியங்கிரி மலையில் தவெக கொடி.. சிக்கிய இளைஞர்

61பார்த்தது
கோவை: வெள்ளியங்கிரி மலை கோயிலுக்கு செல்லும் வழியில், தவெக கொடியை தொண்டர் ஒருவர் பறக்கவிட்டுச் சென்ற சம்பவம் அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கொடியை அகற்றினர். ஆலந்துறை போலீசார், வனத்துறையினர் இணைந்து கொடியை பறக்கவிட்ட நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கட்சி கொடி பறக்கவிடப்பட்ட நிலையில், மலை உச்சியில் இளைஞர் ஒருவர் கொடியுடன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி