பள்ளி மாணவியை சுட்டு கொன்ற இளைஞர் (வீடியோ)

47879பார்த்தது
பீகார் தலைநகர் பாட்னாவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அனாமிகா குமாரி என்ற பள்ளி மாணவியை மாணிக்சந்த் என்ற இளைஞர் ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார். சம்பவத்தன்று தெருவில் நடந்து சென்ற அனாமிகா குமாரியிடம் தன்னை காதலிக்கும் படி மாணிக்சந்த் வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு அனாமிகா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணிக்சந்த் தான் மறைத்து வந்திருந்த தூப்பாக்கியால் அவரை சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றதாக கூறினர்.