உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. துவரிகாஞ்ச் புறக்காவல் நிலையத்தை அடுத்துள்ள கோவிலில் காணிக்கை பெட்டியில் இருந்த பணத்தை இளைஞர் ஒருவர் கொள்ளையடித்துள்ளார். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கோவில் பூசாரிகள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளதாக தெரிகிறது. அந்த வீடியோ வைரலாகி வருகிறது.