கடந்த அக்டோபர் 11ம் தேதி, தலைநகர் டெல்லியில் நடந்த ஒரு கொடூர சம்பவம் தாமதமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காலே கான் பகுதியில் சாலையோரம் ரத்த வெள்ளத்தில் பெண் சடலத்தை போலீசார் கண்டெடுத்தனர். உடனடியாக சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஓடும் ஆட்டோவில் வைத்து 3 பேர் கொண்ட கும்பல் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்துள்ளது. குற்றத்தில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.