உயிரைதான் காப்பாற்ற முடியல.. இதையாச்சும் செய்யுங்க (Video)

85பார்த்தது
குவைத்தில் உள்ள கட்டிடத்தில் நேற்று (ஜூன் 12) ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 49 பேர் உயிரிழந்த நிலையில் அதில் ஐந்து பேர் தமிழர்கள் ஆவர். இதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கருப்பண்ணன் ராமுவும் ஒருவர். அவரின் மறைவால் மொத்த குடும்பமும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்ந்திருக்கிறது. ராமுவின் மகன் கூறும் போது, “ குவைத்தில் அப்பா 26 வருடமாக இருந்தார், விசா முடிந்து ஊருக்கு வரும் சமயத்தில் இப்படி ஆகிவிட்டது. அவர் உயிரை தான் காப்பாற்ற முடியவில்லை, உடலையாவது எங்களிடம் கொடுங்கள்” என்றார்.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி