ஐஸ்கிரீம்-ல் மனித விரல்... பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

72பார்த்தது
ஐஸ்கிரீம்-ல் மனித விரல்... பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
மும்பையில் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பையை அடுத்த மலாத் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் யுமோ பிராண்டு ஐஸ் கிரீமை ஆன்லைனில் ஆர்டர் செய்து, சாப்பிட்டுள்ளார். அப்போது, அவர் நாக்கில் ஏதோ தட்டுப்படவே ஐஸ்கிரீமை உற்றுநோக்கிய பெண்ணுக்கு பேரதிர்ச்சி காத்திருந்து. துரிதமாக செயல்பட்ட பெண், மனித விரலுடன் இருந்த ஐஸ்கிரீமை புகைப்படம் எடுத்துவிட்டு உடனே காவல் நிலையம் விரைந்துள்ளார். இதையடுத்து, ஐஸ்கிரீம் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்த மலாக் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி: நியூஸ் 18 தமிழ்.

தொடர்புடைய செய்தி