வெண்தோல் நோயாளிகள் சந்திக்கும் சிக்கல்கள்.!

69பார்த்தது
வெண்தோல் நோயாளிகள் சந்திக்கும் சிக்கல்கள்.!
அல்பினிசம் நோய் பாதித்தவர்கள் சமூகத்தில் கேலி கிண்டல்களுக்கு உள்ளாகின்றனர். இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் உண்டாகிறது. வேலைவாய்ப்பு, கற்றல் திறன் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படுகிறது. பார்வையில் சிக்கல்கள் ஏற்படுகிறது. சூரிய ஒளியால் தோல் பாதிப்பு, சரும புற்றுநோய் போன்றவை ஏற்படுகிறது. இதனால் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படுகின்றனர். இந்த நோய் ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவாது. இருப்பினும் பலரும் அவர்களைக் ஒதுக்குகின்றனர். அவர்களாலும் நம்மை போல் செயல்பட முடியும். எனவே அவர்களை அரவணைத்து செல்வது அவசியம்.

தொடர்புடைய செய்தி