ஆபாச வீடியோவை அனுப்பிய பெண், கள்ளக்காதலனுடன் கைது

82285பார்த்தது
ஆபாச வீடியோவை அனுப்பிய பெண், கள்ளக்காதலனுடன் கைது
தூத்துக்குடி: ஏரல் புதுமனை தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (42) செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கும், திருமணமான இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இளம்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் உள்ளார். இந்நிலையில் இளம்பெண் தனது 3 வயது பெண் குழந்தை மற்றும் குடும்பத்தினரின் ஆபாச வீடியோக்களை உதயகுமாரின் செல்போனுக்கு அனுப்பினார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் பரவியது. இதனையறிந்த இளம்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்து, மனைவி மற்றும் உதயகுமார் மீது ஸ்ரீவைகுண்டம் போலீசில் புகாரளித்தார்.

2 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் நேற்று கைது செய்தனர். உதயகுமாரை பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், இளம்பெண்ணை நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறையிலும் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி