கென்யாவில் மார்கரெட் அகுடு என்ற பெண் நேற்று முன்தினம் (நவ. 30) தனது குடும்ப மருத்துவர் அழைப்பின் பேரில் அவர் வீட்டிற்கு பிரார்த்தனை செய்ய சென்றார். பிரார்த்தனையின் போது அவரை விஷப்பாம்பு கடித்துள்ளது. இதை மருத்துவரிடம் சொல்லியும் அவர் மார்கரெட்டை காப்பாற்றாமல் தொடர் பிரார்த்தனையில் ஈடுபட்டார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்தார். மார்கரெட் மரணத்தில் நீதி வேண்டும் என குடும்பத்தார் கோரியுள்ளனர்.