மத்திய அமைச்சர் ஆகிறாரா அண்ணாமலை?

71பார்த்தது
மத்திய அமைச்சர் ஆகிறாரா அண்ணாமலை?
மோடியின் புதிய அமைச்சரவை பட்டியலில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பெயரும் பரிசீலிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலை மத்திய அமைச்சரானால் தமிழக பா.ஜ.க. தலைவரை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க.வில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதி இருப்பதால், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு மாநில தலைவர் பொறுப்பில் தொடர வாய்ப்பு குறைவு. எனவே அண்ணாமலையை மத்திய அமைச்சராகும் பட்சத்தில் வானதி ஸ்ரீனிவாசன் தமிழக பாஜக தலைவராக வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி