நாமக்கல் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் உமா கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவது, “நம்முடைய அரசுப் பள்ளிகளில் என்ன அடிப்படை வசதிகள் இல்லை. வருமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களும் தங்களது பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள் என்றால் இத்தனை அரசு அதிகாரிகள் இருந்து என்ன பயன்? அரசு அதிகாரிகள் மெத்தனமாகச் செயல்படுவதுதான் காரணமா?” என்றார்.