தமிழ்நாடு மற்றும், புதுச்சேரியில் இன்று இன்னும் சில மணி நேரங்களில் ஃபெங்கல் புயல் உருவாக உள்ளது. இதனால், தமிழகத்தில் தீவிர முதல் அதிதீவிர கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அரசுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.