பூமியில் வாழும் மிகப்பெரிய உயிரினங்களில் ஒன்று நீலத்திமிங்கலம். 80 முதல் 100 அடி வரை நீளம் கொண்டது. இதன் எடை சராசரியாக 150 டன் அளவில் இருக்கும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நீலத்திமிங்கலத்தின் அதிகபட்ச எடை 173 டன் ஆகும். ஒரு நீலத்திமிங்கலம் ஒரு நாளைக்கு சராசரியாக 3,500 கிலோ உணவை உட்கொள்கிறது. நீலத்திமிங்கலங்கள் 80-90 வருடங்கள் வரை வாழும். இதன் நுரையீரல் 5,000 லிட்டர் தண்ணீர் கொள்ளும் அளவிற்கு பெரியது. இதன் இதயம் 600 கிலோ அளவிற்கு எடை இருக்கும்.