சீனா: காதலனின் உள்ளாடையில் விஷம் தடவி காதலி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிச்சுவான் மாகாணத்தில் உள்ள நான்சோங்கில் உள்ள ஜோதிடர் சாவ் (59) ஜிங் என்ற பெண்ணை காதலி வந்துள்ளார். மேலும், ஜிங்-யை பலமுறை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார். இதனை பொறுக்க முடியாமல், 2017ஆம் ஆண்டு முதல், சாவ்-யின் உள்ளாடையில் ஜிங் விஷம் தடவி வந்திருக்கிறார். இதனால், உடல் உறுப்புகள் அழுகி, சித்ரவதையை அனுபவித்து சாவ் உயிரிழந்திருக்கிறார்.