கோவில்களில் இறைவன் திருவீதி உலா வருவதற்கு பல காரணங்கள் உள்ளது. கோயிலுக்கு செல்ல இயலாத முதியவர்கள், நோய்வாய் பட்டவர்கள், கர்ப்ப காலம், மாதவிடாய் மற்றும் பிற காரணங்களால் கோயிலுக்கு செல்ல இயலாதவர்கள் இறைவனை வணங்க வேண்டும் என்பதற்காகவே உற்சவர் சிலை ஒன்றை செம்புத் திருமேனியில் அமைத்து வீதி உலா வரச் செய்கின்றனர். இப்படி உற்சவராக வரும் இறைவனை யார் வேண்டுமானாலும் வணங்கலாம். அதற்கு எந்த தடையும் கிடையாது.