காட்டுக்கு அரசன் சிங்கம் என்றாலும், வனத்திற்குள் கம்பீரமாக தனி நடை போட்டு வாழ்ந்து வரும் ஓர் இனம் புலி..! வாழிடங்கள் இழப்பு, சட்டவிரோதமாக வேட்டையாடப்படுவது, சட்டவிரோதமான விலங்குகள் வர்த்தகம், மனித – விலங்கு மோதல், பருவநிலை மாற்றம், போதிய வனவிலங்கு பாதுகாப்பின்மை, விழிப்புணர்வு இல்லாமை போன்ற பலவிதமான காரணங்களால் புலிகள் மட்டுமின்றி அனைத்து வகை வன விலங்குகளும் அழிக்கப்படுகின்றன அல்லது அழிந்துவருகின்றன.